சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் பணிகளை தொடங்கியுள்ளனர். மாற்று கட்சியினரை சேர்ந்தவர்களை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில், ஒசூர் அருகே சாமபனப்பள்ளி பஞ்சாயத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் தொழிலதிபர் எஸ்.ஆர்.சம்பங்கி முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.