ஆளூர் ஷா நவாஸ் விலகல்? - விசிக மறுப்பு

4393பார்த்தது
ஆளூர் ஷா நவாஸ் விலகல்? - விசிக மறுப்பு
விசிக முன்னாள் எம்எல்ஏவும், முதன்மைச் செயலாளருமான ஆளூர் ஷா நவாஸ் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைய இருப்பதாக தகவல் பரவியது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ் பேசியது போல் போலிச் செய்திகளை உருவாக்குவதும், அவர் விசிக-வை விட்டு விலகுகிறார் எனத் திட்டமிட்டு வதந்தி பரப்புவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விசிகவின் எழுச்சியை விரும்பாத சக்திகளின் இத்தகைய மலிவான குழப்ப முயற்சிகளை முறியடிப்போம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி