கொள்கைத் தலைவர் என தவெக போடும் நாடகம் அம்பலம் - டிடிவி தினகரன் தாக்கு

3211பார்த்தது
கொள்கைத் தலைவர் என தவெக போடும் நாடகம்  அம்பலம் - டிடிவி தினகரன் தாக்கு
பெரியாரின் பிறந்தநாளான செப்., 17ஆம் தேதி, அவர் பிறந்த ஈரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், அரசியலுக்காக பெரியாரை தங்களது கொள்கைத் தலைவர் என தவெக போடும் நாடகம்  அம்பலமாகியுள்ளது.  பெரியாரை வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் நாடகத்தைக் கைவிட்டு, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி