ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 6-ஆவது ஆண்டாக ஊதியம் ஏதுமின்றிப் பணியாற்றி வருகிறார். 2020-இல் கொரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்ததைக் கருத்தில்கொண்டு, தனது சம்பளம் மற்றும் படிகளை அவர் துறந்தார். எனினும், பங்குகள் மூலமான லாபத்தொகை (Dividend) அவருக்குக் கிடைக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு அவரது குழுமத்திற்கு ரூ.3,987 கோடி டிவிடெண்ட் வருவாய் கிடைத்துள்ளது.