ரூ.56.72 கோடியில் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் அறிவித்தார். பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படும். மின்மோட்டார் சூரிய சக்தி பம்புசெட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.