ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்கா சிகாகோவில் நடைபெற்ற உலக விவகாரங்களுக்கான மாநாட்டில் நேற்று (நவ.10) பங்கேற்றார். அதில் பேசிய அவர், "இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அதிகபட்ச வரி விதிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. நான் அரசியல் குறித்து பேசவில்லை. ஆனால், வரியால் பாதிக்கப்படும் சாமானியர்கள் குறித்து கவலை அடைகிறேன். அமெரிக்கா நம்பத்தகுந்த நாடு இல்லை" என பேசியுள்ளார்.