தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (பிப்., 13) திருச்சி வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வரும் அவர், இரவில் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். நாளை (பிப்., 14) காரைக்கால் சென்று அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் சேலம் சென்று பாஜக மத்தியக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். அமித்ஷாவின் வருகையையொட்டி பாஜக தலைவர்கள் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.