புதுவையில் இன்று (பிப்.14) பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். இதையடுத்து, கோட்டுச்சேரியில் உள்ள வீட்டுச் சுவரில் தாமரை சின்னத்துக்கு வர்ணம் தீட்டி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்தார். வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.