மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் மற்றும் காரைக்கால் பயணமாக நேற்று முன்தினம் இரவு (பிப்., 13) திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். நள்ளிரவில் நடைபெற்ற பாஜக கட்சி மையக்குழு கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்து தேர்தலை தீவிரமாக எதிர்கொள்ள தயாராகுமாறு நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.