கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீரென உணவு ஒவ்வாமையானதால் திடீரென வாந்தி எடுத்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமித்ஷாவுக்கு மருத்துவர்கள் ஓய்வு அறிவுறுத்தியதால், ஹூப்ளி மற்றும் பெலகாவியில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர், அவர் உடல்நலம் தேறி தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார். இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி,
அமித்ஷா தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.