அமமுகவின் புதிய மாணவியர் அணி செயலாளர் நியமனம்

3286பார்த்தது
அமமுகவின் புதிய மாணவியர் அணி செயலாளர் நியமனம்
அமமுகவின் புதிய மாணவியர் அணி செயலாளராக தனம் அபிநயா என்பவரை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், சிவகங்கை மாவட்ட மாணவியர் அணி செயலாளராக இருந்து வந்த தனம் அபிநயா, மாணவியர் அணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக, சசிகலாவை சந்தித்ததால் மாணவியர் அணி செயலாளராக இருந்த ஜீவிதா நாச்சியார் என்பவரை டிடிவி தினகரன் கட்சியில் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you