ஆளுநரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் மர்மமான முறையில் மாயமானது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். "அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை; மொபைலை யாராவது பிடுங்கி வைத்துவிட்டார்களா எனத் தெரியவில்லை. அவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே கையெழுத்திட்டார். ஆனால், இப்போது விஜய் பக்கம் அவர் இருப்பதாகக் காட்டப்படுவது ஜனநாயகப் படுகொலை," எனத் தெரிவித்தார். குதிரை பேரம் குறித்து ஆளுநர் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்