மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ், இ-பிங்க் நிற ரிக்ஷாவை ஓட்டி அசத்தினார். புதிய திட்ட தொடக்க விழாவில் இன்று (ஜூன் 02) பங்கேற்ற அவர் பயனாளிகளுக்கு ஆட்டோக்களை வழங்கினார். இந்த முன்னெடுப்பை 'பாம்லா அறக்கட்டளை' ஏற்பாடு செய்திருந்தது. இவை சுற்றுச்சூழலுக்கு உகந்த 'மின்சார ஆட்டோக்கள்' என்பதால், நகரத்தில் கரியமில வாயு வெளியேற்றம் பூஜ்ஜியமாக இருக்கும். இந்த திட்டம் மூலம் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.