சீனாவின் தன்னிச்சை பெயர் மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி: லடாக் பகுதிகளுக்கு இந்திய பெயர்கள் அறிவிப்பு

2பார்த்தது
சீனாவின் தன்னிச்சை பெயர் மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி: லடாக் பகுதிகளுக்கு இந்திய பெயர்கள் அறிவிப்பு
இந்திய எல்லை பகுதிகளுக்கு சீனா தன்னிச்சையாக பெயர் சூட்டி உரிமை கோரி வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக்கில் உள்ள 28 இடங்களுக்கு நிலையான இந்திய பெயர்களை சூட்டி மத்திய அரசு வரைபடத்தில் பதிவேற்றியுள்ளது. சீனா ஆக்கிரமித்துள்ள கிழக்கு லடாக்கில் உள்ள 'டேஹ்ரா காம்பஸ்' மற்றும் வணிக பாதைகளின் முகாம்கள் உள்ளிட்ட பகுதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சீனாவுக்கு கொடுக்கப்பட்ட வலுவான பதிலடியாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி