இந்தியாவில் நடக்கும் இணையவழி நிதி மோசடிகளை தடுக்க, வங்கிக் கணக்கு மற்றும் டிஜிட்டல் வாலட்களின் பணப்பரிவர்த்தனைகளை உடனடியாக முடக்கும் அவசரகால 'கில் ஸ்விட்ச்' வசதியை இந்திய ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வருகிறது. இந்த புதிய பாதுகாப்பு அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் UPI, IMPS, NEFT மற்றும் இணைய வங்கி சேவைகளை மொபைல் செயலி, குறுஞ்செய்தி அல்லது இணைய முகப்புகள் வழியாக தாங்களாகவே எளிதாக 'செயல்படுத்தவோ அல்லது நிறுத்தவோ' முடியும்.