நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

9750பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் குடியிருப்புகளுக்கு நடுவே இருந்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நள்ளிரவில் இடிந்து விழுந்தது. 1997-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் குடிநீர்த் தொட்டியின் தூண்கள் பலவீனமாக இருந்ததாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நள்ளிரவு ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டதாகவும், பகலில் விழுந்திருந்தால் பேராபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி