தமிழகத்தின் முக்கிய கோட்டைகளாக கருதப்படும் சென்னை மற்றும் கோவையில் இந்த முறை தேர்தல் களம் தலைகீழாக மாற வாய்ப்புள்ளதாக
அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். சென்னையில் திரு.வி.க நகர், தியாகராய நகர் போன்ற தொகுதிகளில் அதிமுக மற்றும் தவெகவின் வருகையால்
திமுக சவாலை எதிர்கொண்டுள்ளது. மறுபுறம், அதிமுகவின் பலமான இடமான கோவையில் செந்தில் பாலாஜியின் வியூகங்களால் கோவை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளில்
திமுக பலமான முன்னேற்றத்தை கண்டுள்ளதால், இரு நகரங்களிலும்
முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.