பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடிப்பில் அண்மையில் வெளியான ”சந்த் மேரா தில்” திரைப்படத்தில், அவர் பாரம்பரிய உடையில் பரதநாட்டியம் ஆடுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த நடனத்தில் அவரது அசைவுகள் இயல்பாக இல்லாமல் '
ரோபோட்' போல இருப்பதாக கூறி நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களையும் மீம்களையும் பகிர்ந்து வருகின்றனர். திரையுலகில் அறிமுகமான காலம் முதலே பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் அனன்யா பாண்டே, இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணையவாசிகளின் டிரோல்களுக்கு ஆளாகியுள்ளார்.