மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அனார்கலி என்ற 57 வயதான பெண் யானை இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது. யானைகள் இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுப்பதே அரிதான நிகழ்வு ஆகும். இத்தகைய சூழலில், 57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டைக் குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை மற்றும் அதன் குட்டிகள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.