இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீனின் மூத்த மகன் டாக்டர் கலீலுர் ரஹ்மான் உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர்
விஜய்,
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின்,
காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுளும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திருச்சியில் உள்ள காதர் மொகிதீனின் இல்லத்திற்கு நேரில் சென்ற
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.