10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 94.31% ஆக உயர்ந்துள்ளதாகவும், இது கடந்தாண்டை விட 0.51% அதிகம் என்றும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், #DravidianModel ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக இந்த வளர்ச்சியை பெற்றுள்ளோம். கடந்த ஐந்தாண்டுகளில் போடப்பட்ட அடித்தளத்தால் இனி ஆண்டுதோறும் அதிகரிக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. மாணவச் செல்வங்கள், ஆசிரியப் பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.