சென்னை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்ற யோசனையை பாமக ஏற்காது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், “வைப்புத்தொகை குறித்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். பொதுக்கூட்டங்களில் விதிகளும், ஒழுங்கும், கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.