சென்னையில் இன்று (நவ.12) கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அன்புமணி, “இன்னும் 5 மாதங்களில் நீங்கள் எம்எல்ஏ-வாகவோ, அமைச்சராகவோ மாற போகிறீர்கள். அதனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை ஆழமாக தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார். இதன் மூலம், பாமகவுக்கு அதிக சீட்டுகள் வழங்கும் கட்சியுடன் அவர் கூட்டணி வைக்க இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி அவர் தவெக உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.