சென்னை: மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை திமுக அரசு பறித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கண்டன தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (நவ.8) அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுத் துறைகளில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களுக்குப் பணிநிலைப்பு வழங்குவதற்கான வாய்ப்புகளையும், சிறப்பு ஆள்தேர்வு முகாம் நடத்துவதற்கான வசதியையும் தி.மு.க. அரசு ஒற்றை அரசாணையின் மூலம் பறித்துள்ளது” என்றார்.