ராமதாஸ் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த அன்புமணி தரப்புக்குத் தடை

3பார்த்தது
பாமக நிறுவனர் ராமதாஸின் புகைப்படங்களை அவரது அனுமதியின்றி அன்புமணி ராமதாஸ் தரப்பினர் தேர்தல் பிரச்சாரங்களிலோ அல்லது கட்சி நிகழ்ச்சிகளிலோ பயன்படுத்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கட்சியின் தலைமை மற்றும் சின்னம் தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவி வரும் சட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி