விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (டிச.29) காலை 11 மணிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்கிறார். புதுச்சேரியில் நேற்று (டிச.28) நடைபெற்ற பொதுக்குழுவில், ராமதாஸின் பேரனான முகுந்தன் என்பவரை இளைஞரணி தலைவராக ராமதாஸ் நியமித்தார். இதனை அன்புமணி ஏற்க மறுத்ததால், மேடையிலேயே இருவருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இந்நிலையில், இன்றைய சந்திப்பில் அன்புமணி முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.