தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சிக்கன் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், நாமக்கல் சந்தையில் கிலோவுக்கு ரூ.28 குறைந்து இன்று ரூ.110-க்கு விற்பனையாகிறது. இதன் எதிரொலியாக கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பிற நகரங்களிலும் விலை கணிசமாக குறைந்துள்ளதோடு, சென்னையில் தோல் நீக்கிய சிக்கன் 200 முதல் 220 ரூபாய் வரை விற்கப்படுகிறது.