தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம், கைவிடப்பட்ட, ஆதரவற்ற மற்றும் காயமடைந்த விலங்குகளுக்காக மாநிலம் முழுவதும் 6 விலங்குகள் நல காப்பகங்களை நிறுவியுள்ளது. இந்த காப்பகங்களை மனிதாபிமான அடிப்படையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த, தகுதியும் அனுபவமும் வாய்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், விலங்குகள் நல அமைப்புகளின் பங்களிப்பை வாரியம் வரவேற்கிறது. விண்ணப்பங்களை www.tnawb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, 10.03.2026-க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.