பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் முதல் அண்ணா சதுக்கம் வரை பிரமாண்ட அமைதிப் பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் பேரணியை தொடங்கினார். இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.