நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர்.. திமுக எம்பி தொடர்ந்த வழக்கு

0பார்த்தது
நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர்.. திமுக எம்பி தொடர்ந்த வழக்கு
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'திமுக பைல்ஸ்' என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு வெளியிட்டார். இதில், திமுக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனை எதிர்த்து டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக இன்று (பிப்.16) நீதிமன்றத்தில் அண்ணாமலை, டி.ஆர்.பாலு இருவரும் ஆஜராகினர்.