கோவாவில் நடைபெற்ற சவாலான IRON MAN விளையாட்டு போட்டிகளில் தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை பங்கேற்றார். இந்த போட்டிகள் உடல் மற்றும் மன வலிமையை சோதிக்கும் நீச்சல், சைக்கிளிங் மற்றும் ஓட்டம் போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கியது. இந்திய அளவில் நடைபெறும் இந்த போட்டியில் அண்ணாமலை உற்சாகத்துடன் கலந்துகொண்டார். தனது அரசியல் பயணத்திற்கு இடையே, உடல் ஆரோக்கியத்தின் மீது அவர் காட்டும் அக்கறையை இந்த பங்கேற்பு எடுத்துக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.