10 கலைஞர்களுக்கு தலா ரூ.25,000 பரிசு அறிவிப்பு

4273பார்த்தது
10 கலைஞர்களுக்கு தலா ரூ.25,000 பரிசு அறிவிப்பு
தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை சார்பாக ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலைக்காட்சி நடத்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் கலைக்காட்சியில் 10 பேருக்கு தலா ரூ.25,000 மற்றும் கூட்டுக் கலைக்காட்சியில் 5 குழுக்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படவுள்ளது. 
புகைப்படத்துடன் கூடிய சுவவிவரக்குறிப்பு, கைபேசி எண், கலைப்படைப்புகளின் 5 புகைப்படங்களை வரும் அக்., 1ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். முகவரி: கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், எழும்பூர் சென்னை 600 008

தொடர்புடைய செய்தி