வங்கி ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு பொதுத்துறை வங்கிகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி, வேலைநிறுத்தம் நடைபெறும் 3 நாட்களும் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் வாடிக்கையாளர்கள் எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி பணத்தை எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.