சென்னை மயிலாப்பூரில் கிராம கோயில் பூசாரிகள் மாநாடு இன்று (பிப்.28) நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11 அறிவுப்புகளை வெளியிட்டார். அதன்படி, ‘ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும். உறுப்பினர் (பூசாரி) மரணமடைந்தால் வாரிசுகளுக்கு வழங்கப்படும் ரூ. 50,000ல் இருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும். ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1,00,000ல் இருந்து ரூ.1,25,000 ஆக உயர்த்தப்படும்” உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.