பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் மேலும் ஒரு ஒட்டுக்கேட்பு கருவி உள்ளதா என சோதனை செய்யக்கூறி, விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் பாமக நிர்வாகி அன்பழகன் புகார் அளித்துள்ளார். அதில், ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது யார்? எதற்காக வைத்தார்கள், இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை கண்டறியுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக வைக்கப்பட்டிருந்த ஒட்டுக்கேட்பு கருவியை ஆய்வு செய்த அதிகாரிகள், அதற்கான அறிக்கையை ராமதாஸிடம் ஒப்படைத்தனர்.