பீகாரில் நடைபெற்ற திருமண விழாவில் விருந்தினர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100 பேருக்கு பதிலாக 200 பேரை அழைத்து வந்ததாகக் கூறி ஆத்திரமடைந்த மணமகளின் தந்தை, திருமண விருந்தில் பேதி மருந்தை கலந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சாப்பிட்ட பலர் திடீரென உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, அருகிலிருந்த ஆற்றங்கரையை நோக்கி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.