ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், 'அன்கில் 123' என்ற புதிய திரைப்படத்தை அறிவித்துள்ளது. இயக்குநர் அனுராக் காஷ்ய முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை, சாம் ஆண்டன் இயக்குகிறார். உடைந்த கண்ணாடியுடன் அனுராக் காஷ்ய காணப்படும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும், படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.