கோவையில் திடீரென ஆடிய அடுக்குமாடி கட்டிடம்.. பீதியில் மக்கள்

10பார்த்தது
கோவையில் திடீரென ஆடிய அடுக்குமாடி கட்டிடம்.. பீதியில் மக்கள்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி கட்டிடம் திடீரென ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, கட்டிடத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத்தில் ஏற்பட்ட அதிர்வுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி