அப்பல்லோ மருத்துவமனைகளின் நிர்வாகத்தினர் முதலமைச்சர் விஜய்யை இன்று (மே 19) சந்தித்து பேசினர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த சந்திப்பின் போது, அப்பல்லோவின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, மேலாண்மை இயக்குநர் டாக்டர் சுனிதா ரெட்டி மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சருக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, சுகாதாரத்துறை குறித்து ஆலோசனை நடத்தினர்.