ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் டுயோ அறிமுகத்தைத் தொடர்ந்து, பழைய மாடல்களின் விலையை இந்தியாவில் ஆப்பிள் உயர்த்தியுள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜ் தட்டுப்பாடே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஐபோன் 17 (256 ஜிபி) விலை ரூ.17,000 உயர்ந்து ரூ.99,900-ஆகவும், 512 ஜிபி மாடல் ரூ.1,24,900-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐபோன் ஏர் ஆரம்ப விலை ரூ.1,49,900 ஆகவும், டாப் எண்ட் மாடல் ரூ.2,24,900 வரையிலும் உயர்த்தப்பட்டு ஆன்லைன் தளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.