இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர் பணிக்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப் பணி, தொழில்நுட்பம், கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பிறகு, 25% வீரர்கள் நிரந்தர பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். ஏப்ரல் 1 கடைசி நாள்.