தொடர்ந்து 15 நாட்களுக்கு முகத்தை ஐஸ் தண்ணீரில் கழுவி வருவதன் மூலம், முகத்தில் உள்ள இரத்த ஓட்டம் அதிகரித்து சருமம் உடனடி புத்துணர்ச்சியையும் பொலிவையும் பெறுகிறது. இது முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் வீக்கங்களை குறைப்பதுடன், சரும துளைகளை சுருக்கி அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இருப்பினும், அதிக நேரம் ஐஸ் கட்டிகளையோ அல்லது குளிர்ந்த நீரயோ நேரடியாக சருமத்தில் வைப்பது எரிச்சலை ஏற்படுத்தலாம் என்பதால் சில நொடிகள் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.