தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி. தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தடையை நீக்கியுள்ளது.