நெருங்கும் பொதுத்தேர்வு.. ரயில்வே துறைக்கு மநீம கோரிக்கை

2பார்த்தது
நெருங்கும் பொதுத்தேர்வு.. ரயில்வே துறைக்கு மநீம கோரிக்கை
தமிழகத்தில் பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், ரயில்வே துறைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், "பொதுத் தேர்வுகள் நெருங்கும் வேளையில், சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது நமது மாணவர்களுக்கு கடுமையான நெருக்கடியை உண்டாக்குகிறது. முன்னறிவிப்போ, தகுந்த முன்னேற்பாடோ இன்றி ரயில்கள் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. தென்னக ரயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி