அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த திருநங்கை அப்சரா ரெட்டியை, துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பலரும் தவெகவில் இணைந்து வரும் நிலையில், தலைமைக்கு கட்டுப்பட்டு உறுதுணையாக இருப்பவர்களுக்கு இபிஎஸ்
பதவி வழங்கி வருகிறார். அந்த வகையில், பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.