அரசு நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய, ஆதார் அடிப்படையிலான தரவு சரிபார்ப்பு முறையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவற்றைப் பெறுவோரின் விவரங்கள் சரிபார்க்கப்படும். மேலும், வேறு திட்டங்களில் பயனடைந்து வருபவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.