மதுரையில் தவெக 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், பொறுப்பு அமைச்சராக நிர்மல்குமார் உள்ளார். கல்லாணை மற்றும் தங்கப்பாண்டிக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் தங்கள் ஆதரவாளரை மேயராக்க கல்லாணை, தங்கப்பாண்டி தரப்பு முயல்கிறது. ஆனால் அமைச்சர் நிர்மல்குமார் தனது தீவிர ஆதரவாளரை முதல் பட்டியலில் வைத்துள்ளார். கவுன்சிலர் சீட் கேட்டு பல்வேறு தரப்பினரும் அணுகுகின்றனர். தேர்தல் நெருங்கும் போது மதுரை தவெகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.