சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை வென்று ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில், இன்று அமைச்சரவை பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் பட்டினப்பாக்கத்தில் விஜய் தலைமையில் நடைபெற்றது. அதில், மொத்தம் 20 அமைச்சர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வி.எஸ்.பாபு, மரிய வில்சன், திலகபாமா, செங்கோட்டையன், ஆதவ், சீமானை தோற்கடித்த பிரபு, ராஜ்மோகன் ஆகியோர் பெயர் முக்கியமாக இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.