தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் போதுமான கழிவறை வசதி உள்ளதா? என்ற விவரங்களை தாக்கல் செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை தூய்மை பணியாளர்கள் உள்ளனர்? காலிப்பணியிடங்கள் எத்தனை? என்பது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை அரசுப் பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள் ஏற்படுத்த உத்தரவிடக்கோரிய மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.