கூப்பிட்டு வெச்சு அசிங்க படுத்துறீங்களா என்ன? - திமுக எம்எல்ஏ கொதிப்பு

1பார்த்தது
ஒரு மாலை கூட வாங்கி வெக்க மாட்டிங்களா? கூப்பிட்டு வெச்சு அசிங்க படுத்துறீங்களா என்ன? என்று புதுச்சேரி திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் அதிகாரிகளை கடிந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி சிலைக்கு நேற்று மாலை அணிவிக்க வந்த போது, அரசு சார்பில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மட்டுமே மாலை உள்ளது என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி